இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவல் காரணமாக 11 நீதிமன்றங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத் பார் அசோசியேஷன் செயலாளர் நபில் தாஹிர் மிட்சா கூறுகையில்,
12 நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறிந்த நிலையில் அடுத்த 14 நாள்களுக்கு நீதிமன்றங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட நீதிமன்றங்களில், மூன்று கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதிகள், ஒரு மூத்த சிவில் நீதிபதி மற்றும் ஏழு சிவில் நீதிமன்றங்களின் நீதிபதிகள் என்று அவர் கூறினார்.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறை மீறல்கள் காரணமாகவே நிலைமை ஆபத்தானது என்று வியாழக்கிழமை பார் அசோசியேஷன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி மேலும் 154 பேருக்கு கரோனா தொற்றும், ஒரு பலியும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,810 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தான் தலைநகரில் கரோனாவுக்கு மொத்த பலி எண்ணிக்கை 215 ஆகவும், மொத்த பாதிப்பு 19,454 ஆகவும் உள்ளது. தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 1,480 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனந்த் அம்பானி பிறந்த நாள்! 9 கேரள கோயில்களுக்கு ரூ. 22.5 கோடி நன்கொடை!

யார் வந்தாலும் கவலை இல்லை! - விஜய் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


