நாட்டின் முதல் நீர்வழி விமான சேவை தொடக்கம்

குஜராத் மாநிலம் கெவாடியாவில் நாட்டின் முதல் நீர்வழி விமானச் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
நாட்டின் முதல் நீர்வழி விமான சேவை தொடக்கம்

குஜராத் மாநிலம் கெவாடியாவில் நாட்டின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை  இடையே இன்று முதல் விமானங்களை இயக்கப்போவதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி நாட்டின் முதல் நீர்வழி விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்ட நீர்விமானத்தில் பயணம் செய்து அதன் சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார். ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை (சர்தார் வல்லபபாய் படேல் சிலை) ஆகியவை இடையே இன்று முதல் நாள்தோறும் 2 நீர்வழி விமானங்கள் இயக்கப்படவிருக்கின்றன. இதன் பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் ஆகும். 

"உடான்' திட்டத்தின் கீழ், இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1,500 ஆகும். பயணச் சீட்டுகளை இணையதள முகவரியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இந்த நீர்வழிவிமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com