நீட் தேர்விற்காக கொல்கத்தாவில் 66 சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கத் திட்டம்
நடைபெற உள்ள நீட் தேர்விற்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 66 சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நடைபெற உள்ள நீட் தேர்விற்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 66 சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி, கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் தேர்வர்களுக்காக 66 சிறப்பு ரயில்களை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 16 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளதால், செப்டம்பர் 13 ம் தேதி தேர்வர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு முழுவதும் எத்தனை மாணவர்கள் தேர்வுக்கு வரமுடியாது என்பதை அறிய கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...