அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவையில்லை: தில்லி அரசு

​தில்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இனி மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை. இதுதொடர்பான உத்தரவை தில்லி அரசு இன்று (புதன்கிழமை) பிறப்பித்தது.

News image
​தில்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இனி மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை. இதுதொடர்பான உத்தரவை தில்லி அரசு இன்று (புதன்கிழமை) பிறப்பித்தது. (கோப்புப்படம்)
Updated On :9 செப்டம்பர் 2020, 11:39 am

DIN


தில்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இனி மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை. இதுதொடர்பான உத்தரவை தில்லி அரசு இன்று (புதன்கிழமை) பிறப்பித்தது.

தில்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் மற்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழங்கும் படிவத்தை நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் தில்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும், கரோனா பரிசோதனைக்கு வருபவர்களிடம் மருந்துவர் பரிந்துரையைக் கேட்கக் கூடாது என தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.