இணைய வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் இல்லாததால் மேற்கு வங்க மாணவி தற்கொலை
மேற்கு வங்கத்தில் இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல் போனதால், 20 வயதான கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மேற்கு வங்கத்தில் இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல் போனதால், 20 வயதான கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் சரிபுகுரி பகுதியில் உள்ள தப்ரிபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி பாலி. முதலாமாண்டு இளங்கலை மாணவரான அவர் ஸ்மார்ட்போன் இல்லாததால் கல்லூரியில் நடைபெற்று வந்த இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.
கல்லூரி இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாததால் மனமுடைந்த பாலி புதன்கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தினக்கூலியான தனது தந்தை அவிராம் “எனது மகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன் தேவை எனக் கேட்டிருந்தார். அவளுக்காக அதை வாங்கித் தர முடியவில்லை. ஆனால் அவர் இப்படி ஏதாவது செய்வார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், எங்கிருந்தாவது கடன் வாங்கி அவளுக்கு ஒரு தொலைபேசி வாங்கியிருப்பேன், ”என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இணைய வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...