யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

”கரோனா வைரஸ் போய்விட்டது” : மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்து

கரோனா போய்விட்டது என மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

News image
மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்
Updated On :11 செப்டம்பர் 2020, 10:29 am

DIN

கரோனா போய்விட்டது என மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் தனியாகலி பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தப் பேரணியில் மாநில பாஜக மூத்தத் தலைவர்  திலீப் கோஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்துப் பேசினார். தொண்டர்களிடம் அவர் பேசும்போது,  “வங்காளத்தில் கரோனா பாதிப்பு இல்லை. அது போய்விட்டது. பாஜகவை ஒடுக்க மாநிலத்தில் பொதுமுடக்கத்தை மம்தா அறிவித்து வருகிறார்.” என்றார்.

மேலும், “பாஜகவின் பேரணிகளைத் தடுக்கும்வகையில் மம்தா செயல்பட்டு வருகிறார். பொய்யாக கரோனா இருப்பதாகக் கூறி விதிக்கப்படும் பொதுமுடக்கத்தால் பாஜகவைத் தடுக்க முடியாது. இந்துக்களுக்கு எதிராக பொதுமுடக்கம் பயன்படுத்தப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

கரோனா நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் சொந்தக் கட்சிப் பிரமுகர் தெரிவித்த கரோனா பாதிப்பு குறித்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்குவங்கத்தில் இதுவரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 175 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3771 பேர் கரோனா பாதிப்பால் பலியாகி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.