மோடியின் வெளிநாட்டு பயணம்: 5 ஆண்டுகளில் ரூ.517 கோடி செலவு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட  வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.517 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட  வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.517 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் வி.முரளீதரன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பிரதமர் மோடி 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக மொத்த செலவு ரூ.517.82 செலவிடப்பட்டுள்ளது என அமைச்சர் முரளீதரன் பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தப் பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் விளைவுகள் குறித்த கேள்விக்கு,  வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com