மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காணொலி வாயிலாக விசாரணை: புகைப்பிடித்த வழக்குரைஞருக்கு 10 ஆயிரம் அபராதம்

குஜராத்தில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின்போது ஒரு வழக்குரைஞர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள

News image
காணொலி வாயிலாக விசாரணையில் புகைப்பிடித்த வழக்குரைஞருக்கு 10 ஆயிரம் அபராதம்
Updated On :25 செப்டம்பர் 2020, 7:36 am

DIN

அகமதாபாத்: குஜராத்தில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின்போது ஒரு வழக்குரைஞர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஏஎஸ் சுபேஹியா முன்னிலையில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுதாரரின் வழக்குரைஞர் காரில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்துவிட்டார்.

வழக்குரைஞர் ஜேவி அஜ்மேராவின் இந்த பொறுப்பற்ற நடத்தைக்கு கண்டிப்புத் தெரிவித்த நீதிபதி, அபராதமும் விதித்துள்ளார்.

வழக்குரைஞர் ஜேவி அஜ்மேராவின் மிக மோசமான நடத்தைக்கு இந்த நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது. மேலும், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, இன்னும் ஒரு வார காலத்துக்குள் அபராதத்தை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கையின் போது, இவ்வாறு ஒரு வழக்குரைஞர் காரில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்தபடி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. வழக்குரைஞரின் இதுபோன்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.