/

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image
மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
Updated On :26 செப்டம்பர் 2020, 5:56 am

DIN


புது தில்லி: இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்நாள் பிரதமர் மோடி சுட்டுரை வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க இறைவனை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இவர் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்படுவதற்கு முன்பு பாஞ்சாப்பைச் சேர்ந்த கஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், காம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெற்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.