கோவாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதிக்குத் தடை

கோவாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 
கோவாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதிக்குத் தடை

கோவாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறுகையில், 

கோவாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைப் பார்க்கும்போது, ​​ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக தடை செய்துள்ளது. 

மேலும், அனைத்து தொழில்துறை ஆக்ஸிஜன் தேவைகளும் கோவா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் கரோனா மருத்துவமனைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கரோனா மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு உணவு வழங்குதலைக் கையாளும் வகையில் மாநில அரசு தனியார் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது என்றார். 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி 927 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. மொத்தம் 65,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 868 தொற்று காரணமாக உயிரிழந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com