நாட்டில் இதுவரை 14.78 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை
நாட்டில் இதுவரை 14.78 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


நாட்டில் இதுவரை 14.78 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 102-வது நாளான நேற்று (ஏப்.28) 25,56,182 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
22,989 அமர்வுகளில் 15,69,000 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 9,87,182 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சுகாதாரப் பணியாளர்கள் 93,47,775 பேர் முதல் கட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இதேபோன்று 61,06,237 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாம் கட்டத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதேபோன்று முன்களப் பணியாளர்களில் 1,22,21,975 பேர் முதல் கட்ட கரோனா தடுப்பூசியையும், 65,26,378 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மருத்துவர்களுக்கு முதல் கட்டமாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது கட்டமாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது கட்டமாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்க்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...