156 நாள்களுக்குப் பின்.. நாட்டில் 3.19 லட்சமாகக் குறைந்த கரோனா நோயாளிகள்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,467 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,467 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 25,467 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,24,74,773 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 36,486 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 97.68 சதவீதமாக உள்ளது. இது 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு மிக உயர்ந்த விகிதமாகும். இதுவரை மொத்தம் 3,17,20,112 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 3,19,551 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் 156 நாள்களுக்குப் பிறகு கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தடுப்பூசி: நாட்டில் இதுவரை மொத்தம் 58.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...