நாடாளுமன்றத் தேர்தல்: விரைவில் காங்கிரஸ்-சிவசேனை கூட்டணி?
காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சி என்பது சாத்தியமில்லை என சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சி என்பது சாத்தியமில்லை என சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணி குறித்த விவாதங்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.
இதையும் படிக்க | 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி: ஸ்பெயின் அனுமதி
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ரெளத், “காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை. எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை குறித்து விவாதங்கள் எழலாம். ராகுல் காந்தி விரைவில் மும்பை வர உள்ளார். பாஜகவிற்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி கூட்டணி தான் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க | குறைந்த தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
மேலும் பேசிய அவர், “உத்தவ் தாக்கரேவை சந்தித்த பின் காங்கிரஸ் சிவசேனை கட்சி கூட்டணி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் சிவசேனை பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...