வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

24 மணிநேரத்தில் 5 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2021, 11:56 am

DIN

கடந்த 24 மணிநேரத்தில் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குஜராத், கேரளம், கர்நாடகம், தில்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று கடந்த நவம்பர் 24-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்து திரும்புவர்கள் மூலம் பரவி வருகிறது.

அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 4 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தில்லி யூனியன் பிரதேசத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தில்லியில் புதிதாக இருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 24-ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 பேர் குணமடைந்தனர். 

குஜராத்தில் 4 பேருக்கும், கேரளத்தில் 4 பேருக்கும், கர்நாடகத்தில் 5 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் 170 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.