/

கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டுத் தற்கொலை

தெற்கு கொல்கத்தாவின் தாகூர்புகூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

3 of a family found dead in Kolkata's Thakurpukur

Updated On :10 பிப்ரவரி 2021, 7:41 am

PTI

தெற்கு கொல்கத்தாவின் தாகூர்புகூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தகுர்புகூரின் மொண்டல்பாராவில் உள்ள அவர்களது வீட்டில் சந்திரபிரதா மொண்டல் (50), அவரது மனைவி மாயாராணி (45) மற்றும் அவர்களின் மகன் சுப்ரியோ (28) ஆகியோரின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

மாநில சட்டசபையில் பணிபுரிந்த சந்திரபிரதா, நிதி நெருக்கடிக்கு ஆளானதாகவும், இதனால் அவர் பலரிடமிருந்து பணம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இறப்புக்கான காரணங்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சந்திரபிரதா தனது மனைவியையும் மகனையும் கொன்றாரா என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.