மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு,


புது தில்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அப்பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், அதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களகை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 15-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், அந்தப் பதவியிடம் காலியாகிறது.
குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...