அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்: சோனியா காந்தி

​வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜனவரி 2021, 2:22 pm

DIN


வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"மோடி அரசு தனது அதிகார ஆணவத்தைக் கைவிட்டு, மூன்று கருப்பு சட்டங்களையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற்று குளிரிலும் மழையிலும் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே ராஜ தர்மமாக இருக்க முடியும். உயிரிழந்த விவசாயிகளுக்கும் இது உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அரசு தயக்கம் காட்டுவதால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக ஈகோ நிறைந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிப்பவர்களின் போராட்டத்தையும் வேதனையையும் இவர்களால் புரிந்துகொள்ள முடியாது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.