மகாராஷ்டிரத்தில் இதுவரை 51 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

மகாராஷ்டிரத்தில் இதுவரை 51 ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் இதுவரை 51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
மகாராஷ்டிரத்தில் இதுவரை 51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

மகாராஷ்டிரத்தில் இதுவரை 51 ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் முதல் மூன்று நாள்களிலேயே 60 சதவிகித இலக்கு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், எளிதில் இலக்கு எட்டப்பட்டு வருகிறது. இதுவரை 51 ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com