விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,689 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 137 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு தொற்று

Updated On :27 ஜனவரி 2021, 5:03 am

DIN

நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,689 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 137 பேர் உயிரிழந்துள்ளனர். 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,06,89,527-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 137 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,53,724 போ் உயிரிழந்தனா். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் இது 1.44 சதவீதமாகும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,03,59,305 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 96.90 சதவீதமாகும்.

நாட்டில் தற்போது 1,76,498 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.66 சதவீதம் ஆகும். தொடா்ந்து 8-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இணை நோய் இருந்தது.

நாட்டில் இதுவரை மொத்தம் 20,29,480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 26-ஆம் தேதி வரை 19,36,13,120 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை மட்டும் 5,50,426 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.