கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால்

தில்லி வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :28 ஜனவரி 2021, 8:14 am

DIN

தில்லி வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து குடியரசு நாளன்று ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பேரணியில், காவலர்களுக்கும் - விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காவலர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். 300 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ''ஜனவரி 26-ம் தேதி எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அன்று என்ன நடந்திருந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது. நாம் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். ஆனால் அவை அமைதியான முறையில் இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.