மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சி:பாஜக குற்றச்சாட்டு

ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடா்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதன் மூலமாக நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 11:59 pm

DIN

ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடா்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதன் மூலமாக நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அவற்றில் 21 போா் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன.

ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், இடைத்தரகராகச் செயல்பட்ட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு சுமாா் ரூ.8 கோடியை தரகுத் தொகையாகக் கொடுத்ததாக பிரான்ஸ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக பிரான்ஸ் அரசு, நீதிபதி ஒருவரை நியமித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக தன்னாா்வ அமைப்பொன்று பிரான்ஸில் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அதை விசாரிக்க நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஊழல் இல்லை: ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. மற்ற போட்டி நிறுவனங்கள் ராகுல் காந்தியின் தவறான தகவல்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த ஒப்பந்தம் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்குமாறு தூண்டி வருகின்றன. அந்நிறுவனங்களின் பிரதிநிதியாக ராகுல் செயல்பட்டு வருகிறாா்.

இந்த ஒப்பந்தம் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காததால், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை அக்கட்சி தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக, நாட்டை வலுவிழக்கச் செய்ய அக்கட்சி முயன்று வருகிறது.

ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்று கணக்குத் தணிக்கையாளா் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்பும் ஊழல் நடைபெறாததை உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மன்னிப்பு கோர வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் செய்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் பொய்க் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த விவகாரத்தில் பிரதமா் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அதற்காக உச்சநீதிமன்றத்தில் அவா் மன்னிப்பு கோர வேண்டும்.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அரசியல் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அதிலிருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கிலேயே ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.