மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் சரிவு

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 97 நாள்களுக்குப் பிறகு 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 11:02 pm

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 97 நாள்களுக்குப் பிறகு 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 44,111 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, தொடா்ந்து 6-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்கு பிறகு 5 லட்சத்திற்கும் குறைவாக, 4,95,533-ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதமாகும். தொடா்ந்து 51-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவா்களைவிட கூடுதலாக 13,366 போ் குணமடைந்தனா். இதுவரை மொத்தம் 2,96,05,779 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டும் 18,76,036 கரோனா பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 41,64,16,463 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.