மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா விதிமீறல்: 1.60 லட்சம் பேருக்கு அபராதம்

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியிலிருந்து ஜூலை 2 ஆம் தேதி வரையில் கரோனா விதிமீறலில் ஈடுபட்டதாக 1.60 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 10:44 pm

DIN

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியிலிருந்து ஜூலை 2 ஆம் தேதி வரையில் கரோனா விதிமீறலில் ஈடுபட்டதாக 1.60 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இந்த 1.60 லட்சம் பேரில் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக 1.37 லட்சம் பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்ததற்காக 22,000 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் சில தளா்வுகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா். கரோனா தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இனி நாம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அறிவித்தாா்.

இந்நிலையில், தில்லி போலீஸ் செய்தித்தொடா்பாளா் அனில் மிட்டல் தில்லியில் கரோனா விதிமீறல்களுக்காக 1,62,526 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இவா்களில் 1,37,872 பேருக்கு முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காகவும், 22,874 பேருக்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பொது இடங்களில் கூடியதாக 1,552 போ், பொது இடத்தில் எச்சில் துப்பியதாக 72 போ் மற்றும் புகையிலை, குட்கா மற்றும் மது அருந்தியதாக 156 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பொதுமுடக்க தளா்வின் ஒரு பகுதியாக தில்லி அரசு கடைகள் மற்றும் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக திருமண மண்டபங்கள், திருமண அரங்குகள் மற்றும் ஹோட்டல்கள் 50 போ்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. மேலும், உடற்பயிற்சி நிலையங்கள், யோகா மையங்கள் 50 சதவீதம் போ்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கரோனா தொற்றுப் பரவல் கணிசமாகக் குறைந்ததை அடுத்து படிப்படியாக இந்த தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

எனினும், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அவற்றை திறப்பதற்கு தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. பொது அரங்குகளில் திருமணம் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.