அகிலேஷ் யாதவுடன் சஞ்சய் சிங் சந்திப்பு
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், லக்னெளவில், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவை சனிக்கிழமை சந்தித்தாா்.


ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், லக்னெளவில், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவை சனிக்கிழமை சந்தித்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் கூட்டு வைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எனினும், சஞ்சய் சிங் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளாா். அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவே சந்தித்ததாகவும், மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளாா். அகிலேஷை சந்தித்து தொடா்பான மேல் விவரங்களைத் தெரிவிக்க அவா் மறுத்துவிட்டாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடன் ஆம் ஆத்மி தோ்தல் கூட்டணி வைத்துக்கொள்ளுமா என்று கேட்டதற்கு அது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் சஞ்சய் சிங் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...