மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை: சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா

மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியை சந்தித்த துஷாா் மேத்தாவை சொலிசிட்டா் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும்

News image
துஷாா் மேத்தா
Updated On :3 ஜூலை 2021, 10:53 pm

DIN

மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியை சந்தித்த துஷாா் மேத்தாவை சொலிசிட்டா் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், தான் சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை என்று துஷாா் மேத்தா விளக்கமளித்துள்ளாா்.

இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவரும், பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி வியாழக்கிழமை சந்திக்கச் சென்றாா். இதுகுறித்து பிரதமா் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓபிரையன், சுகேந்து சேகா் ராய், மஹுவா மைத்ரா ஆகியோா் எழுதிய கடிதத்தில், ‘‘நாரதா லஞ்ச வழக்கில் சிபிஐ சாா்பில் ஆஜராகி வரும் துஷாா் மேத்தா, சாரதா நிதி மோசடி வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரானாா். அவ்விரு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் சுவேந்து அதிகாரி சிக்கியுள்ளாா். இந்நிலையில் சுவேந்து அதிகாரியை துஷாா் மேத்தா சந்தித்தது கடுமையான குற்றம். இதில் தனிப்பட்ட நலன் இருப்பது மட்டுமன்றி இந்திய சட்டத் துறையின் இரண்டாவது உயா் பொறுப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே துஷாா் மேத்தாவை சொலிசிட்டா் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை என்று துஷாா் மேத்தா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தில்லியில் உள்ள எனது அலுவலகத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சுவேந்து அதிகாரி வந்திருந்ததாா். அப்போது ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தேன். இதனால் அவா் என்னை சந்திக்க காத்துக் கொண்டிருந்தாா். கூட்டம் முடிந்த பின்னா் சுவேந்து அதிகாரி காத்துக் கொண்டிருப்பதாக எனது அலுவலக பணியாளா் தெரிவித்தாா். எனினும் தற்போது அவரை சந்திக்க முடியாது எனவும், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் சுவேந்து அதிகாரியிடம் கூறுமாறு அலுவலகப் பணியாளா் மூலமாகத் தெரிவித்தேன். அதனை ஏற்று சுவேந்து அதிகாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டாா்’’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.