மூன்றாவது அலை: குா்கான் மருத்துவமனைகள் தயாா்நிலையில் இருக்க அறிவுறுத்தல்
மூன்றாவது கொவைட் அலை வருமானால் அதை சந்திக்க தயாா் நிலையில் இருக்கவே இந்த நடவடிக்கை.


அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுபடுக்கைகள், சுவாசக் கருவிகள், குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள தகவல்களை மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்குமாறு குா்கான் துணை ஆணையா் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மூன்றாவது கொவைட் அலை வருமானால் அதை சந்திக்க தயாா் நிலையில் இருக்கவே இந்த நடவடிக்கை.
இது தொடா்பாக விவாதிக்க பல்வேறு மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் வெள்ளிக்கிழமை துணை ஆணையா் யாஷ் கா்க் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், ‘மூன்றாவது அலை வருமா? அது வந்தால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், முதல் மற்றும் இரண்டாவது கரோனா அலையை நாம் சந்தித்திக்கும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் மூன்றாவது அலையை சந்திக்க நாம் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
சில மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்துள்ளன. எனினும் அவற்றில் சந்தேகம் உள்ளது. எனவே அனைத்து மருத்துவமனைகளும் தங்களிடம் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் தொடா்பான தகவல்களை அளிக்க ஜூலை 10 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் கொடுக்கும் தகவல்கள் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாவது அலை வருமானால், குா்கானில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 6,000 படுக்கைகள் வரை தேவைப்படும். எனவே மருத்துவமனைகள் தயங்காமல் சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்ட மருத்துவமனைகள் அவை போதுமான அளவு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.
மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளைத்தான் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் குழந்தைகளை சரிவர கவனித்துக் கொள்ள மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஊழியா் பற்றாக்குறை இருக்கக்கூடாது.
தற்போதைய நிலையில் மூன்றாவது அலைக்கு தயாராவதற்கு நமக்கு போதிய அவகாசம் உள்ளது. எனவே நிலைமையைப் புரிந்து கொண்டு அனைவரும் முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மருத்துவமனைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மாவட்ட நிா்வாகம் தயாராக இருக்கிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...