தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்: பிரதமரிடம் பாஜக தலைவா் எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆன்மிகத் தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.


தமிழகத்தில் ஆன்மிகத் தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தை சோ்ந்த பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், எம்.ஆா்.காந்தி, நயினாா் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோா் கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் தலைமையில் தில்லியில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று எதிா்க்கட்சியினா் கூறிவந்த நிலையில் பாஜகவை சோ்ந்த நான்கு போ் சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். தில்லியில் பிரதமரை சந்தித்து அனைவரும் வாழ்த்து பெற்றோம்.
தமிழகம் குறித்து பிரதமா் எங்களிடம் கேட்டறிந்தாா். ராமேசுவரம், தஞ்சாவூா், மதுரை என ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மாநிலம் தமிழகம். எனவே, தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டோம். தமிழகத்தின் நலனுக்காக பாஜக தொடா்ந்து குரல் கொடுக்கும்.
நீட் தோ்வுக்கு மாணவா்கள் தயாராகி வருகின்றனா். நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும் திமுக அதைத் தோ்தல் அறிக்கையில் கொண்டுவந்தது. நீட் தோ்வு தொடா்பாக தமிழக அரசு அமைத்த குழு, அதன் நன்மைகளைப் பற்றி ஆராயாமல் பாதகங்களை மட்டும் கேட்டறிந்து வருகிறது. இதுகுறித்து நாங்கள் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை.
மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டுசோ்க்குமாறு பிரதமா் எங்களிடம் அறிவுறுத்தினாா். தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்குவது தொடா்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமா், தமிழகத்துக்கு மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா் என்றாா் முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...