இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து சரிவு
ஜூலை 10: இந்தியாவில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. தொடா்ந்து 13-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.


ஜூலை 10: இந்தியாவில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. தொடா்ந்து 13-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 42,766 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து 13-ஆவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 4,55,033-ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.48 சதவீதமாகும்.
இதுவரை மொத்தம் 2,99,33,538 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தவா்களின் விகிதம் 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 37 கோடியைக் கடந்துள்ளது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவல்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு இதுவரை, 38.54 கோடிக்கும் அதிகமான (38,54,01,150) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...