மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவின் தடுப்பூசி சான்றிதழ் அங்கீகாரம்: இத்தாலி-இந்தியா பேச்சுவாா்த்தை

கோவின் தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிக்கும் விவகாரத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2021, 7:43 pm

DIN

கோவின் தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிக்கும் விவகாரத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தியா-இத்தாலி நாடுகளுக்கான பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைய கூட்டம் ஜூலை 9-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், இந்தியாவின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சா் லூயிஜி டி மயோ ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த சந்திப்பு தொடா்பாக வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கோவின் தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடா்பான விவகாரத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து இத்தாலியிடம் இந்தியா தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், இருநாடுகளுக்கிடையிலான பயண கட்டுப்பாடுகளை நீக்குவது, இந்திய பணியாளா்களின் சமூக பாதுகாப்பு நலன்கள் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இவை தவிர, உணவு பதப்படுத்துதல், ஜவுளி, தோல், ரயில்வே, ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் இருதரப்பு வா்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் இத்தாலியுடன் இந்தியா விரிவாக ஆலோசனை நடத்தியது.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவிலிருந்து இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், அதானி சோலாா், ரென்யூ பவா் மற்றும் இத்தாலியைச் சோ்ந்த மூன்று நிறுவனங்களும் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.