ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி: மல்லிகார்ஜுன கார்கே
கரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் பிரதமர் மோடி பழி ஏற்றுக்கொள்ளாமல் ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கியதாக மல்லிகார்ஜுன கார்கே விமரிசித்துள்ளார்.


கரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் பிரதமர் நரேந்திர மோடி பழி ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை அமைச்சரை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமரிசித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் அவர் பேசியது:
"மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட கரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தில்லியில் கரோனா இரண்டாம் அலையின்போது மற்றவர்களுக்கு ஆக்சிஜன் விநியோகம், பிளாஸ்மா தானம் செய்து உதவியர்களை நான் வணங்குகிறேன்.
முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் பல மாநில தேர்தலில் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். உங்களது விதமுறைகளை நீங்களே மீறுகிறீர்கள். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.
பாத்திரங்களை தட்டச் சொல்லியும், மெழுவர்த்தியை ஏத்தச் சொல்லியும் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். இதற்கான பழியை தான் ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை அமைச்சரை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கிவிட்டார்."
சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தின் முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்ஷவர்தன். இதன்பிறகு மன்சுக் மாண்டவியா புதிய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...