திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் உரை: காங். புறக்கணிப்பு

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரையில் காங்கிரஸ் பங்கேற்காது என காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Updated On :20 ஜூலை 2021, 12:18 pm

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரையில் காங்கிரஸ் பங்கேற்காது என காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் இரு அவைத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு விரிவான உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் உரையில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமெனவும், கரோனா குறித்த விரிவான அறிக்கையை அவைகளில் தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளும் அனைத்து உறுப்பினர்களின் முன்பு உரை நிகழ்தத வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைக்கு பின்னரே பிரதமரின் உரையில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.