திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வேளாண் சட்டங்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் போராட்டம்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் போராட்டம்

Updated On :22 ஜூலை 2021, 6:13 am

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல் காந்தி, அதீர் ரஞ்சன் செளத்ரி உள்பட காங். எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதராவாகவும் பதாகைகளை ஏந்தி காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூலை 19 முதலே சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.