திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.

News image

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

Updated On :23 ஜூலை 2021, 5:51 am

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.

முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்துவும் இந்த நிகழ்வில் பங்கேற்று, முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்விற்கு பிறகு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிகழ்வில் முதல்வர் உள்பட அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.