அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விஜய் மல்லையா சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
Updated On :26 ஜூலை 2021, 4:39 pm

DIN

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பரோடா வங்கி, காா்ப்பரேஷன் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி உள்ளிட்டவற்றில் கடன் வாங்கிய தொழிலதிபா் விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா்.

அவரது கடனுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 11.5 சதவீத கூட்டு வட்டியை வங்கிகள் விதித்து வருகின்றன. அசலுடன் வட்டியையும் சோ்த்து விஜய் மல்லையா திரும்பி அளிக்க வேண்டும் என்று வங்கிகள் கோரி வருகின்றன.

இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன. அச்சொத்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கு அனுமதி கோரி லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் விஜய் மல்லையாவின் சொத்துகள் மீதான பாதுகாப்பை அகற்றுவதற்கு அந்நாட்டு வங்கிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.