2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கர்நாடக பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? தர்மேந்திர பிரதான் விளக்கம்

கர்நாடக பாஜகவின் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மையை எடியூரப்பா முன்மொழிய, கோவிந்த்கார்ஜோள் உள்ளிட்டோர் வழிமொழிந்ததாக மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூலை 2021, 3:57 pm

DIN


கர்நாடக பாஜகவின் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மையை எடியூரப்பா முன்மொழிய, கோவிந்த்கார்ஜோள் உள்ளிட்டோர் வழிமொழிந்ததாக மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் கூறியது: 

"கர்நாடக பாஜகவின் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எடியூரப்பா முன்மொழிய, கோவிந்த்கார்ஜோள் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். கர்நாடகத்தில் பாஜக என்றால் அது எடியூரப்பா. கடந்த 50 ஆண்டுகால வாழ்க்கையை மக்கள் பணிக்காக அர்ப்பணித்துள்ளார்.

எடியூரப்பா மற்றும் அவரது அணியின் கடினமான உழைப்பால் கர்நாடகத்தில் பாஜக இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. 

அண்மையில் தில்லி வந்த எடியூரப்பா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேட்டுக்கொண்டார். எடியூரப்பா போன்ற உயர்ந்த தலைவர்களால் கர்நாடகத்தில் கட்சி கிராமங்களிலும் வேர்பிடித்துள்ளது. எடியூரப்பா தொடர்ந்து பாஜகவுக்கு வழிகாட்டுவார்.

பாஜகவின் நாடாளுமன்றக் குழு, சட்டப்பேரவைக் குழுவின் ஆதரவுடன் பாஜக சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்றார் அவர்.

முன்னதாக, கீழே அமர்ந்திருந்த பசவராஜ் பொம்மை மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது எடியூரப்பாவின் காலில் விழுந்து பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். 

அதைத் தொடர்ந்து, பசவராஜ் பொம்மைக்கு தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.