அனைத்து காவல் நிலையங்கள், மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் 2020, டிசம்பா் 2-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிசிடிவி கேமராக்களை பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தினத்திலிருந்து 6 மாதங்களுக்குள் அதை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்கீடு செய்யவும், தமது அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி மத்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.