இந்திய, அமெரிக்க உறவின் மையப்புள்ளியாக ஜனநாயகம் திகழ்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுருந்தது.
இந்நிலையில், ஆண்டனி பிளிங்கன் திட்டமிட்டபடி இன்று ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தான், பருவநிலை மாற்றம், கரோனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "சுதந்திரம், சமத்துவம் ஆகிய விழுமியங்கள் இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியம். ஆனால், இரு நாடுகளும் அதற்காக போதுமானவற்றை செய்யவில்லை.
வியூக, பொருளாதார ரீதியான உறவுகளை தாண்டி
ஜனநாயகமே இரண்டு நாட்டு உறவுக்கு மையப்புள்ளியாக திகழ்கிறது. எனவே, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளும் பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதையும் படிக்க | சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தலிபான்கள்
அமெரிக்கர்கள் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் போற்றுகின்றனர். அந்த வழியில்தான், இந்தியாவையும் பார்க்கிறோம். சுதந்திரமாக யோசிக்கும் குடிமக்களால்தான் இந்திய ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிக்க | கரோனாவிலும் புதிய ஸ்மார்ட்போன் வாங்க மக்களிடம் ஆர்வம்: ஆய்வு
அரசியலமைப்பு, மத சுதந்திரத்திற்கான உரிமை ஆகிய விழுமியங்களால் இந்திய அமெரிக்க உறவு பிணைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சில சமயங்களில் அதற்கான பாதை மிகக் கடினமாக இருக்கும். ஜனநாயகத்தின் வலிமை என்பது அதை தழுவி கொள்வதே ஆகும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

