ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 68% குறைந்துள்ளது: லாவ் அகர்வால்

நாட்டில் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதால் மீட்பு விகிதம் 93.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். 

News image

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்

Updated On :5 ஜூன் 2021, 4:30 am

DIN


புதுதில்லி: நாட்டில் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதால் மீட்பு விகிதம் 93.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். 

கடந்த மே 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 68 சதவீதம் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த மே 10-ஆம் தேதி நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. அதன் பின்னா் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 லட்சம் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56 சதவீதம் குறைந்துள்ளது. 

தற்போது நாடு முழுவதும் 377 மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 

சராசரியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் பதிவான மாவட்டங்களில் தொடர்ச்சியான குறைவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் 257 மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் சுமாா் 43 சதவீதம் பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் 37 சதவீதம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 32 மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று பாதிப்பை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.