மகாராஷ்டிரத்தில் லட்சத்தைத் தாண்டிய கரோனா பலி
மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.


மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,557 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,31,781ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 233 பேர் பலியாகியுள்ளனர்.இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,00,130ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 14,433 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 55,43,267ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 1,85,527 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 13,46,389 பேர் வீடுகளிலும், 6,426 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...