லட்சத்தீவு விவகாரம்: மக்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

லட்சத்தீவு நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி அங்குள்ள மக்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
லட்சத்தீவு விவகாரம்: மக்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

லட்சத்தீவு நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி அங்குள்ள மக்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் நிா்வாகியாக இருந்த தினேஷ்வா் சா்மா கடந்த டிசம்பரில் காலமானதையடுத்து, தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையு யூனியன் பிரதேசத்தின் நிா்வாகியாக உள்ள பிரஃபுல் கோடா படேல், லட்சத்தீவுகளின் பொறுப்பு நிா்வாகியாக நியமிக்கப்பட்டார். 

அவா் நடைமுறைப்படுத்திய பல்வேறு நடவடிக்கைகளுக்கு யூனியன் பிரதேச மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

லட்சத்தீவுகள் யூனியன் பிரதேச மக்களின் விருப்பத்தை மீறி மதுபானக் கூடங்களுக்கு அனுமதி வழங்கியது, தீவுகளில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது, விலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் கடலோரப் பகுதிகளில் இருந்த மீனவா்களின் குடில்களை அகற்றியது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிா்வாகி பிரஃபுல் கோடா படேல் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் முஸ்லீம் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் பிரஃபுல் கோடா படேலை திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளன. 

இந்நிலையில் லட்சத்தீவு நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி அங்குள்ள மக்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகளும் கூட அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். மக்கள் அவரவர் வீட்டின் வெளியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com