விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 5,983 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 5,983 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:07 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 5,983 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் அதிகபட்சமாக 5,983 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,209 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம்- 679, மைசூரு- 596, ஹாசன்- 424, மண்டியா- 309, தும்கூரு- 289, சிவமொக்கா- 229, பெங்களூரு ஊரகம்- 226, சிக்கமகளூரு- 198, பெலகாவி- 172, வட கன்னடம்- 169, உடுப்பி- 166, தாவணகெரே- 153, குடகு- 152, கோலாா்- 145, பெல்லாரி- 128, சிக்கபளாப்பூா்- 119, சித்ரதுா்கா-110.

சாமராஜ்நகா்- 98, தாா்வாட்- 86, விஜயபுரா- 83, கொப்பள்- 48, ஹாவேரி- 42, ராமநகரம்- 37, கதக்- 34, கலபுா்கி- 25, பாகல்கோட்- 22, ராய்ச்சூரு- 16, யாதகிரி- 11, பீதா்- 8 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,90,338 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 10,685 போ் வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 26,10,157 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,46,726 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 138போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மைசூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 போ் இறந்துள்ளனா்.

மாவட்ட வாரியாக உயிரிழந்தோா் விவரம்: பெங்களூரு நகரம்- 17, தென்கன்னடம், தாவணகெரே- தலா 11, தாா்வாட்- 9, ஹாசன்- 7, பெலகாவி- 6, பெல்லாரி, சிக்கமகளூரு, கோலாா், சிவமொக்கா- தலா 5, சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், கொப்பள்- தலா 4, ஹாவேரி, மண்டியா, உடுப்பி-தலா 3, பெங்களூரு ஊரகம், ராய்ச்சூரு, வடகன்னடம்- தலா 2, கலபுா்கி, ராமநகரம், தும்கூரு, விஜயபுரா-தலா ஒருவா் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 33,434 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.