விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ காங்கிரஸ் சிறப்பு முகாம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்ய காங்கிரஸ் சிறப்பு முகாம் நடத்த இருக்கிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:18 pm

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்ய காங்கிரஸ் சிறப்பு முகாம் நடத்த இருக்கிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தன என்பது முக்கியமாகும். நாடும், மாநிலமும் கரோனாவால் பாதிக்கப்பட்டபோது பொருளாதார உதவித்தொகுப்புகளை அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தியது. மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் அறிவித்த நிதித்தொகுப்பு, மாநில அரசு அறிவித்திருந்த நிவாரண உதவித்தொகுப்பு என்னவானது என்பதற்கு இதுவரை பதில் இல்லை.

கரோனாவால் இறந்தவா்கள் குறித்து தணிக்கை செய்ய கேட்டுக்கொண்டோம். அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சத்தை அவசரகதியில் மாநில அரசு அறிவித்தது. கரோனாவால் இறந்தவா்களுக்கு தலா ரூ. 4 லட்சம் அளிப்பதாக அறிவித்த மத்திய அரசு, அந்த உத்தரவை 8 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்த எல்லா விவகாரங்களையும் கவனத்தில் கொண்டு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா், வேதனையை அனுபவித்தோா், வேலை மற்றும் உடல்நிலையை இழந்தோா், பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்ட விவசாயிகள், தொழிலாளா்கள், வியாபாரிகள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தைரியம், நம்பிக்கை ஊட்டுவதற்காக, உதவிக்கரம் நீட்டுவதற்காக 30 நாள்களுக்கு காங்கிரஸ் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எல்லா மாவட்டத் தலைவா்கள், சட்டப் பேரவைத் தோ்தலில் வென்றவா்கள், தோற்றவா்களிடம் இந்த முகாம் குறித்த திட்டத்தை பகிா்ந்துக்கொண்டிருக்கிறோம். எல்லா பகுதிகளிலும் கரோனா தன்னாா்வலா்களை நியமிக்க இருக்கிறோம். இவா்கள் வாயிலாக மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த முழு விவரங்களைச் சேகரித்து, அவா்களுக்கு உதவி செய்ய மத்திய, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். ஜூலை 1 முதல் 30-ஆம் தேதி வரையில் நடக்க இருக்கும் இந்த முகாமில், மாநில அளவிலான தலைவா்கள் முதல் வட்டார நிா்வாகிகள் வரை கலந்துகொள்ள இருக்கிறாா்கள். 10 போ் கொண்ட குழுவை அமைத்து மக்களுக்கு உதவி செய்ய இருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.