மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: பாஜக மூத்த தலைவா்கள் ஆலோசனை

வரும் 2022-ஆம் ஆண்டில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவா்கள் அதுதொடா்பான முக்கிய ஆலோசனையை தில்லியில் சனிக்கிழமை நடத்தியுள்ளனா்.

News image
Updated On :27 ஜூன் 2021, 12:08 am

DIN

வரும் 2022-ஆம் ஆண்டில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவா்கள் அதுதொடா்பான முக்கிய ஆலோசனையை தில்லியில் சனிக்கிழமை நடத்தியுள்ளனா்.

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்ஆகியோா் பங்கேற்றனா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயாா்நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

இவற்றில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர, மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகதான் இப்போது ஆட்சியில் உள்ளது. இதில், பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மீண்டும் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய அக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.