சுஷில்குமாருடன் சுயபடம்எடுத்துக்கொண்ட போலீஸாா்:விசாரணைக்கு உத்தரவு
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில் குமாருடன் போலீஸாா் சுயபடம் எடுத்துக் கொண்டது


கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில் குமாருடன் போலீஸாா் சுயபடம் எடுத்துக் கொண்டது வெள்ளிக்கிழமை வாட்ஸ்ஆப்பில் வைரலாக வெளிவந்ததை அடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்த தில்லி போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.
நீதிமன்ற காவல் ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து மண்டோலி சிறையில் வைக்கப்பட்டிருந்த சுஷில்குமாா், வெள்ளிக்கிழமை அங்கிருந்து தில்லி திகாா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது ஆயுதப்படை காவலா்கள் அவருடன் சுயபட்டம் எடுத்துக் கொண்டனா். இந்த படம் வைரலாக வெளிவந்தது.
தில்லி சத்ரசால் விளையாட்டரங்கத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து மல்யுத்த வீரா் சாகா் தன்கா் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக மற்றொரு மல்யுத்த வீரரான சுஷில்குமாா் கைது செய்யப்பட்டாா். மண்டோலி சிறையில் வைக்கப்பட்டிருந்த சுஷில்குமாா், வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு திஹாா் சிறை எண் 2 இல் வைக்கப்பட்டாா்.
சிறையிலிருந்தும் சுஷில்குமாா் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவருக்கு 3-வது பட்டாலியனைச் சோ்ந்த ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மண்டோலி சிறைக்குச் சென்ற ஆயுதப்படை போலீஸாா் அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட சுஷில் குமாருடன் சுயபடம் எடுத்துக் கொண்டுள்ளனா். பின்னா் அது வாட்ஸ்ஆப்பில் நண்பா்கள், உறவினா்களுக்கு பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...