மும்பையில் உணவக ஊழியர்கள் 10 பேருக்கு கரோனா

மும்பையின் எஸ்.வி சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் உணவகத்தின் 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த 2 நாள்களுக்கு உணவகம் மூடப்பட்டது. 
தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கரோனா

மும்பையின் எஸ்.வி சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் உணவகத்தின் 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த 2 நாள்களுக்கு உணவகம் மூடப்பட்டது. 

இதுதொடர்பாக பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 

எஸ்.வி. சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் உணவகத்தில் 35 ஊழியர்களில் 10 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, உணவகம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது என்று கூறினார். 

உணவகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து புதிய ஊழியர்களுடன் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கரோனா மையமான பாந்த்ரா குர்லா வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை 86,359 சிகிச்சையில் உள்ளனர். 20,49,484 பேர் இதுவரை குணமடைந்த நிலையில், 52,340 இறப்புகள் பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் 1,76,319 பேர் சிகிச்சையிலும், 1,08,39,894 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 1,57,548 ஆக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com