யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சதாம் ஹுசேன் பாணியில் மீன் குழம்பில் தாலியம் கலந்து கொடுத்த கொடூரன்

சதாம் ஹுசேன் பாணியில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தைக் கொலை செய்ய மீன் குழம்பில் தாலியத்தைக் கலந்து கொடுத்திருக்கிறார் தில்லியைச் சேர்ந்த கொடூரன்.

News image
சதாம் ஹுசேன் பாணியில் மீன் குழம்பில் தாலியம் கலந்து கொடுத்த கொடூரன்
Updated On :26 மார்ச் 2021, 7:43 am

DIN


சதாம் ஹுசேன் பாணியில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தைக் கொலை செய்ய மீன் குழம்பில் தாலியத்தைக் கலந்து கொடுத்திருக்கிறார் தில்லியைச் சேர்ந்த கொடூரன்.

தாலியம் என்ற விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட மனைவியின் தாய் மற்றும் தங்கை பலியான நிலையில், மனைவியோ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 37 வயதாகும் வருண் அரோராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சதாம் ஹுசேன், தனது எதிரிகளைக் கொல்ல தாலியம் என்ற விஷத்தை உணவில் கலந்து கொடுத்து விடுவார் என்றும், அது மெல்ல, எதிரிகளின் உடலில் பாய்ந்து சில நாள்களில் அவர்கள் இறந்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த பாணியைப் பின்பற்றி, குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிருப்தியில் இருந்த வருண் அரோரா, தாலியத்தை, மீன் குழம்பில் கலந்து கொடுத்துள்ளார்.

ஒரு சில மாதங்களில், மனைவி ரத்தத்தில் விஷம் கலந்து கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நிலையில் மனைவியின் தாய் அனிதா மற்றும் தங்கை பிரியங்கா ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

தாலியத்தின் பாதிப்பினால் மனைவியின் தந்தையும், வீட்டில் வேலை செய்யும் பெண்ணும் உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை, சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் தாலியத்தைக் கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் அரோரா, அவர்கள் வீட்டுக்குச் சென்று, சாப்பிட மீன் குழம்பு வாங்கி வந்ததும் தெரிய வந்தது.

தீவிர விசாரணையின் பலனாக அரோரா தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். அப்போது, தான் தாலியம் கலந்த உணவை மனைவி திவ்யா, மாமியார் அனிதா, மாமனார் தேவேந்தர் மோகன், மனைவியின் தங்கை பிரியங்கா ஆகியோருக்கு கலந்து கொடுத்துள்ளதும், தொடர்ந்து அவர்கள் தன்னை மனிதாபிமானம் இல்லாமல் நடத்தியதால் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரோராவின் செல்லிடப்பேசியில், தாலியத்தைப் பற்றி தேடியிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.