மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாச்சல் இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி

ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :2 நவம்பர் 2021, 10:02 am

DIN

ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஃபதேபூர், அர்கி, ஜுப்பல்-கோட்காய் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு கடந்த சனிக்கிழமை(நவ.30) இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இரு தொகுதிகளில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் பாஜகவும் முன்னிலை வகித்தது. ஆனால், பிற்பகல் நிலவரப்படி மூன்று தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் நடைபெற்ற நிலையில், காங்கிரஸின் இந்த வெற்றி ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அஸ்ஸாம் (5), மேற்கு வங்கம் (4), மத்திய பிரதேசம் (3), ஹிமாசல பிரதேசம் (3), மேகாலயம் (3), பிகாா் (2), கா்நாடகம் (2), ராஜஸ்தான் (2), ஆந்திரம் (1), ஹரியாணா (1), மகாராஷ்டிரம் (1), மிஸோரம் (1), தெலங்கானா (1) ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

அதேபோல, தாத்ரா-நகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தின் மண்டி, மத்திய பிரதேசத்தின் கந்த்வா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.