தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு தொற்று: 392 பேர் பலி

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 10,929 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 392 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

நாட்டில் 107.29 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

Updated On :6 நவம்பர் 2021, 5:58 am

DIN

புதுதில்லி:  நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 10,929 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 392 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 12,509 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 255 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாகும். மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,044,683-ஆக உயா்ந்துள்ளது. 

12,509 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,37,37,468 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.23 சதவிகிதமாக உள்ளது, இது மார்ச் 2020-க்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,46,950-ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கைகளில் ஒரு சதவிதத்திற்கும் குறைவாக உள்ளன, தற்போது 0.43 சதவீதமாக உள்ளது, இது மார்ச் 2020-க்குப் பிறகு முதல் மிகக் குறைவான சதவிகிதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 392 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,60,265 ஆக அதிகரித்துள்ளது.  

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 1,07,92,19,546 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 20,75,942 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 61,39,65,751 பரிசோதனைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் 8,10,783 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.