அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் 29 தொடங்க பரிந்துரை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :8 நவம்பர் 2021, 11:19 am

DIN


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றம் செயல்பட்டு வருவதைப் போலவே குளிர்காலக் கூட்டத்தொடரும் கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரில் 20 அமர்வுகள் வரை இடம்பெறவுள்ளன."

அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளதால் இந்தக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பெகாசஸ் விவகாரம் பூதாகரம் ஆனதைத் தொடர்ந்து, மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போனது.

இந்தக் கூட்டத்தொடரில் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல், லக்கிம்பூர் வன்முறை, விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. 

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.