யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கிச்சூடு: சக வீரர்கள் 4 பேர் பலி; மேலும் மூவர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :8 நவம்பர் 2021, 8:17 am

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் ராணுவப் படையின் முகாம்கள் பல ஆங்காங்கே அமைக்கப்பட்டு வீரர்கள், நக்சல் தீவிரவாதிகளை கண்காணித்து வருகின்றன. 

சுக்மா மாவட்டம் மறைகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் துணை ராணுவப்படை முகாமில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பணியில் இருந்த வீரர் ஒருவர், தனது ஏ.கே.47 துப்பாக்கியால் அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரை அழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சிஆர்பிஎப் வீரர், சக ஊழியர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.